Skip to main content

இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

உடலுக்குள் இயங்கும் இரத்த ஓட்டமும் சுவாசமும் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அதில் ஒன்று பழுதடைந்தால் மரணம் நிச்சயம். அப்படியொரு நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது. அதை மூடிமறைக்கத்தான் காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்து "பாகிஸ்தானுடன் போர்' என்கிற பூச்சாண்டியை காண் பித்துக்கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம். சுதந்திரதின விழாவில் பேசிய மோடி, முப்படைகளுக்கும் ஒரே தலைவர் என்று அறிவித்திருப்பது கூட பொருளாதார வீழ்ச்சிக்கு எதிரான கொந்தளிப்பை அடக்குவதற்குரிய ராணுவ ஆட்சிக்கான ஆரம்ப முயற்சி என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

 

bjp



"மனித நாகரிகம் தொடங்கிய முதல் நூற்றாண்டு முதல் பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆக்கிரமிக்கும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகின் செல்வ செழிப்பான நாடுகளில் ஒன்றாக இருந்தது இந்தியா. உலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 25 சதவிகித பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை. அன்று 25 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு பொருட்களின் உற்பத்தி... பிரிட்டிஷ்காரன் இந்தியாவை விட்டுப் போன 1947-ஆம் ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வெறும் 4.2 சதவிகிதமாக ஆகியிருந்தது. அதன்பிறகு சோவியத் யூனியனின் உதவியுடன் பாது காக்கப்பட்ட பொருளாதாரமாகத்தான் இந்தியா வளர்ந்தது. 1991வரை அப்படியே இருந்தது. 1991ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக் கடியை சந்தித்தது. அதை சமாளிக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் நிதியமைச்சராக மன்மோகன்சிங்கை கொண்டு வந்தார்.

இந்தியா தன்னிடம் இருந்த தங்க இருப்பை கப்பலில் ஏற்றி அனுப்பி உலக வங்கிக் கடனை சமாளித்தது. அதற்குப் பிறகு தாராளமயமாக்கல் என்ற பெயரில், சோவியத் யூனியன் மாடல் கைவிடப்பட்டு அமெரிக்க மாடலை பொருளாதாரத்தில் கொண்டு வந்தார் மன்மோகன்சிங். அந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நரேந்திர மோடியின் ஆட்சியில் தான் சந்திக்கிறது'' என்கிறார் பிரபல பொருளா தார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா.

 

bjp



"இன்றைய இந்தியாவின் பொருளாதார நெருக்கடிக்கு உலக அளவில் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் வர்த்தக போரும் ஒரு காரணம். உலக அளவில் உற்பத்தி அளவு 2018-ல் 3 சதவிகிதமாக இருந்தது. அது 2 சதவிகிதமாக குறைந்து விட்டது. அதன் எதிரொலிதான் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1991-ல் ஏற்பட்டது போலவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை எட்டாக் கனியானது. ஆனால் அதை சமாளிக்க இந்தியாவால் முடிந்தது. இன்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது'' என்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். இந்தியா என்பது இன்றளவிலும் கிராமப் புறத்தை சேர்ந்த பொருளியல் அமைப்பு ஆகும். பருவ மழை பொய்த்தது, கிராமப்புறங்களை பெருமளவு பாதித்திருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை குறைந்தபட்ச விலை தந்து வாங்குவதில் மத்திய அரசு தோல்வியடைந்திருக்கிறது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் சிதிலமடைந்திருக்கிறது. கிராமங்கள்தான் வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்திக்கான பொருட்களை தருகின்றன. அத்துடன் இந்தப் பொருட் களை வாங்கும் சந்தையாகவே இருக்கிறது. வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒருநாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது என்றால் அந்த நாட்டின் வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும். இது பொருளியல் வல்லுநர்களின் வாய்ப்பாடு. அதன்படி பார்த்தால் 1991-க்குப் பிறகு இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.

ஒரு இடத்தில் நடக்கும் உற்பத்தி இன்னொரு இடத்திற்கு அனுப்பப்பட்டு அதை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் அனுபவிப்பார்கள். அந்த உற்பத்தி பகிர்வு -நுகர்வு என்கிற பொருளாதார சங்கிலி இந்தியாவில் அறுந்துவிட்டது. இது இந்தியாவை மிக மிக மோசமான நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டது. "எப்படி இது நடந்தது' என விளக்குகிறார் ஒரு உற்பத்தியாளர்.

 

bjp



விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதார விலை அவன் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கிடைக்காமல் போனதால் கிராம பொருளாதாரம் சீர்குலைந்தது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவ தற்கு முன்பு உள்ள 2008 முதல் 2012 வரையான காலகட்டம், இந்திய பொருளாதாரத்தின் வசந்த காலமாக இருந்தது. கிராமப்புறத்தில் வேலைக்கான சம்பளம் ஒவ்வொரு வருடமும் உயர்ந்தது. ஒரு வருடம் 100 ரூபாய் சம்பாதித்தவன் அடுத்த வருடம் 106 ரூபாய் சம்பாதிப்பான். நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு நிலைமை தலைகீழானது. வருடத்திற்கு 6 ரூபாய் அதிகம் பெற்ற கிராமத்தானின் வருமானம் வெறும் 87 காசு களாக சுருங்கியது. விவசாயம் சாராத தொழில் களை செய்த கிராமத்தினர் அவர்கள் பெற்ற நூறு ரூபாய் சம்பளத்திற்கு அடுத்த வருடம் வெறும் 25 பைசாதான் அதிகம் பெற்றனர். நகர்ப்புற தொழி லாளர்கள். அவர்கள் பெற்ற 100 ரூபாய் சம்பளத்தில் 2 பைசாவை இழந்தார்கள். இது மக்களின் வாங்கும் சக்தியை பெருமளவில் பாதித்தது. இதற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான். அது மக்கள் மனதில் ஆறாத வடுவை உருவாக்கியது.


2018-19-ல் புதிய கார்களை வாங்கியவர்கள் 36 லட்சம் பேர். அதே நேரத்தில் பழைய கார்களை வாங்கியவர்கள் 40 லட்சம் பேர். புதிய காரின் விலைக் குப் பழைய காரே போதும் என கார் வாங்கும் வசதி பெற்ற பணக்காரர்களே நினைக்கும் அளவிற்கு நரேந்திர மோடி கொண்டு வந்து விட்டார். வாங் கும் சக்தி குறைவினால் மட்டும் 2018ஆம் ஆண்டு 14 சதவிகிதமாக இருந்த அனைத்துப் பொருட்களின் விற்பனை 2019-ஆம் ஆண்டு 11 சதவிகிதமாக குறைந்து விட்டது என்கிறது "நீல்சன்' என்கிற சந்தையை ஆய்வு செய்யும் நிறுவனம்'' என்கிறார். அத்துடன் ""மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. மசோதா ஒட்டுமொத்த உற்பத்தியை பாதித்துவிட்டது. உதாரணத்திற்கு மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு எமனாகும் புகையிலைப் பொருட்களுக்கு விதிப்பது போல 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை மோடி அரசு கார்களுக்கு விதித்துள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரியை தாண்டி 22 சதவிகிதம் செஸ் வரி வேறு விதிக்கப் படுகிறது. மகிந்திரா கம்பெனியின் உரிமையாளர், "கார்கள் மீது விதிக்கப்படும் 22 mmசதவிகிதம் செஸ் வரியை 17 சதவிகிதமாக்குங்கள். சிறிய கார்களுக்கு செஸ் வரி போடாதீர்கள். இதனால் அரசுக்கு பெரிய வருமான இழப்பு வராது' என கோரிக்கை வைத்தார். அதற்கான பேச்சுவார்த்தையை கடந்த வாரம் வரை தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கூட கார் உற்பத்தியாளர்கள் பேசி பார்த்தார்கள். பலன் கிடைக்கவில்லை. நரேந்திர மோடி இதே அணுகுமுறையை கடைப்பிடித்தால் "2022-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உற்பத்தி தொழிற்சாலைகளின் உலக தலைநகரமாக மாற்றுவேன்' என்கிற அவர் உறுதிமொழி, கார் உற்பத்தி தொழிற்சாலைகளின் பங்களிப்பில்லாமல் நடக்காது. எனவே அரசு வரி விஷயத்தில் இறங்கி வரவேண்டும்'' என்கிறார் கார் உதிரி பாக உற்பத்தி சங்க தலைவர் அசோக் கபூர்.


கார்கள் மட்டுமல்ல இந்தியாவில் இப்பொ ழுது ஏழைகளின் வாகனமாக இருக்கக்கூடிய இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி 17 சதவிகிதம் குறைந்துவிட்டது. 100 மோட்டார் சைக்கிள்கள் தயாரித்த நிறுவனங்கள் தற்பொழுது 88 மோட்டார் சைக்கிள்கள்தான் தயாரிக்கின்றன. இதற்கு ஒரு எதிர்வினை உண்டு. சுமார் எட்டரை லட்சம் கோடி முதலீட்டில் இயங்கும் ஆட்டோ மொபைல் தொழிலை நம்பி 3.2 கோடி பேர் வேலை செய்கிறார்கள். இந்தியா வின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவிகிதம் வரும் இந்தத் துறையில், கார் உற்பத்தி மட்டும் இரண்டு லட்சம் குறைந்திருக்கிறது. உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படாத கார்களின் மதிப்பு மட்டும் 35,000 கோடி. விற்கப்படாத இரு சக்கர வாகனங்களின் மதிப்பு 17,000 கோடி. விற் பனை 20 சதவிகிதம் குறைந்துவிட்டது என கூக் குரல் இடுகின்றன ஆட்டோ மொபைல் கம்பெனிகள்.

கார் உள்ளிட்ட மோட்டார் வாகன உற் பத்தி துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில், இத்துறையின் வேலை இழப்போரின் எண் ணிக்கை 10 லட்சமாக இருக்கும் என எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள் ளது. இதனை உறுதி செய்வது போல பிரபல நிறுவனமான டி.வி.எஸ். லூகாஸ் தற்போதைய வியாபார மந்த நிலையை காரணம் காட்டி, வேலை நாட்களைக் குறைத்து சுற்றறிக்கை வெளியிட்டுள் ளது. பெரிய நிறுவனங்கள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கை... முதலாளி- தொழிலாளி இரு வர்க்கத்தையும் கடுமையாக பாதிக்கும்.

நரேந்திர மோடியால் தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் இன்னொரு துறை ரியல் எஸ்டேட் துறை. 2018ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் வங்கிகளை தாண்டி ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பண உதவி செய்து வந்த ஒக & எந என்கிற கம்பெனி யும் கேவான் ஹவுசிங் பைனான்ஸ் என்கிற கம்பெனி யும் திவாலாகின. அத்துடன் விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு தப்பி ஓடினார்கள். ஒக & எந கேவான் கம்பெனிகள் திவாலானதால் 60,000 கோடி ரூபாய் பணம் மார்க்கெட்டில் புழங்குவது நின்று போனது. வங்கிகள் லோன் வழங்குவதை 50 சதவிகிதம் நிறுத்திக் கொண்டன. ரியல் எஸ்டேட் கட்டுமான துறைகள் ஸ்தம்பித்து போய் நிற்கின்றன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர், தனது துறை சார்ந்த தொழில் முதலீடுகளில் ஏற் பட்ட கடன் நெருக்கடியில் சென்னை மயிலாப்பூர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள் வது தொழில்களின் நிலைக்கு மரண சாட்சியானது.

இது போன்ற பொருளாதார நெருக்கடிகளை 91ஆம் ஆண்டு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் எதிர் கொண்டார்கள் நரசிம்மராவும் மன்மோகன்சிங்கும். இப்பொழுது பொருளாதார நெருக்கடிக்குத் தேவை, உறுதியான நிர்வாக சீர்திருத்தங்கள். அதை எளிய மக்களின் தலையில் சுமத்தாமல், சாதுர்யமாக செய்வதற்குரிய உறுதியான பார்வை, நரேந்திர மோடிக்கு இல்லை. அவரது பார்வை ஒரே தேசம் என்ற கூட்டாட்சிக்கு எதிரான ராணுவ பாணி ஆட்சியை கட்டமைப்பதில் உள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.