Skip to main content

634 கொலைமுயற்சி, 5000 நிமிட சேமிப்பு, 70 வருட தாடி... ஃபிடல் காஸ்ட்ரோ 

Published on 13/08/2018 | Edited on 13/08/2018

சரித்திர நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் விடுதலைக்காக போராடி, மிகப்பெரும் வெற்றியைக் கண்டவர். ஃபிடல் காஸ்ட்ரோ என்றாலே மிகநீளமான தாடி, உயரமான, வெள்ளை உருவம் இதுதான் பெரும்பான்மையானவர்களுக்கு நியாபகம் வரும். ஆனால் அந்த தாடிக்கு பின்னும் கதை இருப்பது சிலருக்கே தெரியும். அவரைப்பற்றிய சில தகவல்கள்...

 

fidel castro


 

 

 

ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல 634 முறை முயன்றுள்ளனர், பலரும், பலவிதமாக முயற்சித்தனர் ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்தனர் ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரோடு உடனிருந்தவர்களும்... 
 

கிட்டதட்ட 50 ஆண்டுகள் கியூபாவின் தலைவராக இருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. எலிசபெத் ராணி II, மற்றும் தாய்லாந்தின் மன்னர் பூமிபால் அதுல்யாதெச் ஆகியோருக்குபின் ஒரு நாட்டின் அதிகநாட்கள் தலைவராக இருந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. இவர் பதவியிலிருந்த காலத்தில் மட்டும் கிட்டதட்ட 10 அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்துள்ளது...
 

ஃபிடல் காஸ்ட்ரோவின் பழைய படங்களின் அதிகமானவை சிகரெட் பிடிப்பதுபோல இருக்கும். ஃபிடல் காஸ்ட்ரோவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த சிகரெட்டை 1985லிருந்து விட்டுவிட்டார், உடல்நிலை காரணங்களால்... 
 

சட்டப்பள்ளியில் படிக்கும்போதே அரசியல் ஆர்வலராக இருந்தார் இவர்...
 

இளம் போராளியாக இருந்தபோது மலையில் தங்கியிருந்தார். அப்போதிலிருந்து இறக்கும்வரை, 70 ஆண்டுகள் தாடி வைத்தபடியே இருந்தார். கொரில்லா வீரர் என்ற அடையாளத்திற்கு மட்டுமின்றி, அதற்கு நடைமுறை காரணத்தையும் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு 15 நிமிடத்தை சவரம் செய்ய செலவழித்தால் ஒரு வருடத்தில் 5000 நிமிடங்களை இழப்போம். என்று அவர் அடிக்கடி கூறுவார் என்றும் கூறுகின்றனர்... 
 

 

 


அவரின் சில பொன்மொழிகள்:


கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையேயான மரண போராட்டம்தான் புரட்சி...
 

தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்...
 

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்...
 

ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்...
 

நீங்கள் என்னைக் தண்டியுங்கள், சிறையிலடையுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், வரலாறு எனக்கு நீதி வழங்கும்...