Skip to main content

நம்ம கட்சிக்காரங்க வரமாட்டேங்கிறாங்க... திமுக செய்வதைத் தடுத்தால் மக்கள் கோபப்படுவாங்க... அமைச்சரின் அட்வைஸ்... 

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

 

ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் தர தடை விதிக்கப்படுவதாகவும், சமைத்த உணவுகள், நிவாரணப் பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் தரலாம். மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் நிவாரணப் பொருட்களை அளிக்கலாம். சில நபர்கள், அரசியல் கட்சிகள், கட்சியினர் நேரடியாகப் பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயலாகும். அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாகக் கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

 

fff


 

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

திமுகவினர், அதன் கூட்டணிக் கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் வீடற்றவர்கள், வருமானம் இல்லாத நிலையில் குடும்பத்தை நடத்த முடியாமல் உள்ளவர்களுக்கு உணவுகள் மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை வழங்கி வருகின்றனர். இதனை அதிமுக அரசே கொடுக்க வேண்டாம் என்று சொன்னால் மக்கள் கோபப்படுவார்கள். அதிமுகவினர் யாரும் அவர்களைப்போல் வேலை செய்ய வரவில்லை. அவர்கள் கொடுப்பதையும் தடுத்தால் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிடும். அரசு ஆயிரம் ரூபாய் கொடுப்பது, இலவச அரிசி கொடுப்பதெல்லாம் எடுபடாது என்று முதலமைச்சரிடமும், சக அமைச்சர்களிடமும் தெரிவித்திருப்பதாகவும், மாநகராட்சி தேர்தல் நடத்த  வேண்டும், அதற்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் வருது என்பதால் அவர்களும் இதனை திரும்ப பெற்றுவிடலாம் எனக் கூறியதாக அதிமுக அமைச்சர் ஒருவர் நெருங்கிய கட்சிக்காரர்களிடம் முதலமைச்சரிடம் பேசியதைத் தெரிவித்திருக்கிறார்.
 

ggg


 

http://onelink.to/nknapp


மேலும் இந்தத் தடையை அகற்ற வேண்டும் என்று திமுக நீதிமன்றத்திற்கும் சென்றது. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் என்ன செய்வது, இந்த விசயத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிதவிப்பதால், அந்தத் தடையை நீக்கியதுடன், சில திருத்தங்களைச் செய்து உதவி செய்யலாம் என அறிவித்துள்ளது. அதாவது உதவி செய்பவர்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், எந்தப் பகுதியில் உதவி செய்கிறீர்களோ அந்தப் பகுதியைச் சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறைக்குத் தகவல் கொடுத்து அவர்களுடன் இணைந்து உதவி செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
 

-மகேஷ்