நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாஜக கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. 300, 500 வாக்குகள் வித்தியாசத்தில் கிட்டதட்ட 25 தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வராக மூன்று முறை இருந்தவர் சிவராஜ் சிங் சவுகான். நான்காவது முறையாக அவர் தேர்தலை சந்தித்தார். மூன்று முறை முதல்வராக இருந்தவர் மீது எழுந்த எதிர்ப்பு அலையை வெற்றிக்கரமாக சிவராஜ் சிங் சவுகான் சமாளித்திருக்கிறார்.
அவருக்கும், மோடிக்கும் ஏழாம் பொருத்தம். அவருக்கு எதிரான வியாபம் ஊழலை மோடிதான் மறைமுகமாக பெரிதாக்கினார். ஏனென்றால் சிவராஜ்சிங் சவுகான் மோடிக்கு போட்டியாக கட்சியில் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகதான் வியாபம் ஊழலை மோடி ஆதரவாளர்கள் பெரிதாக்கினார்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் மோடி பெரிய அளவில் மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவில்லை. அனைத்து பொறுப்புகளும் சிவராஜ் சிங் சவுகானிடமே கொடுக்கப்பட்டன.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வந்த தோல்விக்கு காரணம் மத்தியில் மோடி அரசு மீது எழுந்த அவநம்பிக்கைதான். எனவே இன்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகளையொட்டி நடைபெற இருந்த பாஜகவின் பார்லிமெண்டரி தலைவர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பாஜகவின் பாராளுமன்ற போர்டு உறுப்பினர்களில் சிவராஜ் சிங் சவுகானும் ஒருவர். இவரையும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் முன்னுரித்தி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.