![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/pxptzQEFfqBoObIMNXTl08ycSSjINFvcOXNoVSOhVm4/1601896546/sites/default/files/inline-images/609_21.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அ.தி.மு.க அமைச்சர்கள் 18 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். 18 பேரும் எடப்பாடிதான் முதலமைச்சர், அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்தக் கூட்டம் நடக்கும் இடத்தில் நுழைந்தார். அவரை கோபத்துடன் பார்த்த எடப்பாடி, ''நீங்க என்ன இங்கேயும் ஆலோசனைக்கு வர்றீங்க... அங்க (ஓ.பி.எஸ்) நடக்கும் ஆலோசனைக்கும் போறீங்க... நீங்க யார்கூட நிக்கிறீங்க... தெளிவா சொல்லுங்க'' என எகிறியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த ஆர்.பி.உதயகுமார், ''நான் ஓ.பி.எஸ்.ஸை மூக்கையா தேவர் சிலை திறப்பு விழா விஷயமாகத்தான் சந்தித்தேன்'' என திரும்ப திரும்ப சொன்னார். அதைக்கேட்ட திண்டுக்கல் சீனிவாசன், ''நான்தான் மூக்கையா தேவரோட சொந்தக்காரன். எனக்குத் தெரியாம மூக்கையா தேவரோட சிலை திறப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் ஓ.பி.எஸ் நடத்துகிறாரா? ஏம்பா பொய் சொல்ற'' என எகிறினார். கூடவே பக்கத்தில் இருந்த செல்லூர் ராஜுவைக் கூப்பிட்டு, ''ஏம்பா உனக்குத் தெரியாம மூக்கையா தேவர் சிலையை திறக்குறாங்க... அதற்கு உன்னை கூப்பிட்டாங்களா?'' எனக் கேட்டார்.
இதனால் ஆடிப்போன ஆர்.பி. உதயகுமார், ''நான் ஓ.பி.எஸ் அணியில் இல்லை. எடப்பாடி அணிதான். என்னைப் பொறுத்தவரைக்கும் எடப்பாடி முதலமைச்சராக வரணும்'' எனக் கூட்டத்திலேயே பவ்யமாக விழுந்து கும்பிடுவதைப்போல நடித்துள்ளார்.
எடப்பாடி தனது ஆதரவு நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர்கள், ''இந்த ஆர்.பி.உதயகுமார் மோசமானவர். இவர்தான் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர். அதற்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக நிறைய பேசினார். இவர் மாறி மாறி பேசக்கூடியவர் என தங்களுக்குள் பேசிக்கொண்டு பிரிந்தனர்.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
அமைச்சர்கள் வட்டத்தில் நாம் பேசியபோது, 7ஆம் தேதி எப்படியாவது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என அறிவிக்க அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி செய்கிறார். அறிவிக்கும் கையெழுத்துப்போட ஓ.பி.எஸ்.ஸையும் மறைமுகமாக நிர்பந்திக்கிறார்கள் என்கிறார்கள்.