Skip to main content

விராட் கோலி பயோபிக்கில் சிலம்பரசன்?

Published on 02/05/2025 | Edited on 02/05/2025
Virat Kohli's Silambarasan song goes viral on the internet!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ் மேனான விராட் கோலி, சிலம்பரசன்  நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் பாடல், பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிலம்பரசன் , விராட் கோலியின் வீடியோவைக் கவனித்து, “நீயே ஒரு சிங்கம்” தான் எனக்கூறும் விதமாக  “நீ சிங்கம் தான்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். இருவரின் ரசிகர்களும், தங்களுக்கு பிடித்த திரைத்துறையிலும் விளையாட்டுத் துறையிலும்  உள்ள இரு ஆளுமைகள், இப்படி ஒற்றுமையுடன் இணைந்து இருப்பதை கொண்டாடி வருகின்றனர்.

சிலம்பரசன்  மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது தனித்துவ (தாடி) ஸ்டைல்களுக்குப் பிரபலமானவர்கள். சிலம்பரசன்  தற்போது கச்சிதமான  உடற்கட்டுடன் உள்ள நிலையில், பல வகைகளில் அவர் விராட் கோலியைப் போலவே தோற்றமளிக்கிறார். சிலம்பரசன், விராட் கோலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக்கில் நடிக்கப் போகிறாரா? என்பது தான் மும்பை திரையுலகத்தில் தற்போதைய பேச்சாக உள்ளது.

இணையதளங்களில் விராட் கோலி மற்றும் சிலம்பரசன்  இடையே ஏற்பட்டுள்ள நட்புறவைப் பார்த்தால், சிலம்பரசன் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கக்கூடும். விராட் மற்றும் அனுஷ்கா விருப்பம் தெரிவித்தால் இது அடுத்த கட்டத்திற்கு நகரும்.

சார்ந்த செய்திகள்