காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி தம்பதியரின் பேரன் அபிநய் 'ராமானுஜர்' படம் மூலம் அறிமுகமாகி பின்னர் 'சென்னை 28 - 2' படத்தில் நடித்து தற்போது த்ரிஷா, சிம்ரனுடன் இணைந்து பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்து வரும் இவர் தன் தாத்தா ஜெமினி கணேசன் குறித்தும், நடிகர் விக்ரம் குறித்தும் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசியபோது....
''என் தாத்தா வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினியாக நடிக்க என்னை விட வேறு யாரும் அந்த கதாபத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்தமாட்டார்கள். அதையும் மீறி வேறு நடிகர்தான் நடிக்கவேண்டும் என்றால் அதற்கு நடிகர் விக்ரம்தான் பொருத்தமாக இருப்பார். இருந்தும் நடிகையர் திலகம் படத்தில் துல்கர் சல்மானும் நன்றாக தான் நடித்திருந்தார். ஆனாலும் என் தாத்தா சாயலில் விக்ரம் இல்லையென்றாலும் கண்ணைமூடிக்கொண்டு அவரை நம்பி ஜெமினி கதாபாத்திரத்தை கொடுத்தால் போதும் அப்படியே அவர் என் தாத்தாவாக மாறி மற்றதை அவரே பார்த்துக்கொள்வார். சினிமாவில் காத்திருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நடிகர் விக்ரமை பார்த்து நான் கற்றுக்கொண்டேன். காத்திருந்தால் எனக்கான நல்ல கதாபாத்திரம் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும்'' என விக்ரமை புகழ்ந்தார்.