![vijay varisu issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/bhS7QHyCI7qOFPDBOp6IfKW-BgK9PhCZTf9SczBvoHQ/1692613265/sites/default/files/inline-images/229_8.jpg)
விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான படம் வாரிசு. தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிட்டதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த ராய் அகஸ்டின் என்ற விநியோகஸ்தர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "வாரிசு படம் ரூ.13 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் ரூ. 6.8 கோடி தான் வசூல் செய்துள்ளது. தான் கொடுத்த பணத்திற்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளார். படம் நஷ்டமானதால் படத்திற்காக கொடுத்த கூடுதல் முன்பணத்தை திருப்பித் தர வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.