Skip to main content

காட்டில் படத்தை தொடங்கும் வெற்றிமாறன்! 

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
soori vetrimatran

 

 

வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன், நகைச்சுவை நடிகர்  சூரியை வைத்து ஒரு படமும், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. வெற்றிமாறன், சூரியை வைத்து எடுக்க இருக்கும் படம், வெளிநாட்டில் நடக்கும் கதைக்களம் என கூறப்பட்டது.

 

கரோனா தோற்று பாதிப்பால், படப்பிடிப்புகள் தள்ளிப்போன நிலையில், வெற்றிமாறன் அடுத்து எந்த படத்தை இயக்குவார் என ரசிகர்களிடையே குழப்பம் எழுந்தது. இதற்கிடையே வெற்றிமாறனும் தனுசும் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில், வெளிநாட்டில் தற்போது படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால், வெற்றிமாறன், சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றிவிட்டதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் மாதத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடங்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகிவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்