Skip to main content

"தி பாஸ் ரிட்டன்ஸ்" - வெளியான 'தளபதி 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

Varisu First Look release

 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கவுரவ வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் எனப் படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தளபதி 66  படத்திற்கு  தெலுங்கில் ’வாரிசுடு’ என்றும், தமிழில் ’வாரிசு’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் கோட் சூட்டில் படு மாஸாக உள்ளார். மேலும் அந்த போஸ்டரில் தி பாஸ் ரிட்டன்ஸ் என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்