Skip to main content

"முதல்வரின் உடல் நலத்தோடு தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருக்கிறது" - வைரமுத்து ட்வீட்

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

vairamuthu tweet about cm mk stalin

 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் தனிமையில் இருந்து வருகிறார். முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

 

அந்த வகையில் வைரமுத்து முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டு முதலமைச்சரின் உடல் நலத்தோடு தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் விரைந்து நலமுறவும் தொடர்ந்து பலம் பெறவும் புயலாய் வலம் வரவும் செயலால் வளம் தரவும் வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அமைச்சர்கள் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துங்களப்பா...” - வைரமுத்து

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Vairamuthu advises to ministers

வெளிநாடு செல்லும் அமைச்சர்கள் இது போன்ற உருப்படியான திட்டங்கள் செயல்படுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘துபாயில் இருக்கிறேன்.. எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல. பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய
குப்பைமேடு.

இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு. வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா...’ எனத் தெரிவித்துள்ளார். 

 

Next Story

“மக்களுக்கு அழகு, மறுவேலை பார்த்தல்” - வைரமுத்து

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
vairamuthu wishes mk stalin for lok sabha election victory

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலே ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

vairamuthu wishes mk stalin for lok sabha election victory

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “நாற்பதுக்கு நாற்பது என்பது மாயத்தால் நிகழ்ந்ததல்ல. நிர்வாகத் திறம் என்ற நியாயத்தால் நிகழ்ந்தது. இந்த வெற்றி உங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சி என்று சொல்லி முதலமைச்சருக்குப் பொன்னாடை பூட்டினேன். பதற்றமில்லாமல் வெற்றியின் பகட்டு இல்லாமல் இயல்பான புன்னகையோடு இருந்தார். வென்றார்க்கு அழகு தோற்றாரை மதித்தல். தோற்றார்க்கு அழகு வென்றாரை வியத்தல். பதவிக்கு அழகு உதவிகள் தொடர்தல். மக்களுக்கு அழகு மறுவேலை பார்த்தல்” என அவரது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.