![master](http://image.nakkheeran.in/cdn/farfuture/y0MokBTfcOi-rsWx2TWs9DwCWywtL3nVQN-hNylypVo/1608180550/sites/default/files/inline-images/51_10.jpg)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'கைதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படத்தை பொங்கலுக்குத் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'வாத்தி கம்மிங்' என்ற பாடல் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடல், யூ-டியூப் தளத்தில் 9.5 கோடி பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் 10 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து உற்சாகமான விஜய் ரசிகர்கள் இத்தகவலை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.