![udhayanidhi stalin start dubbing nenjukku neethi movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/6Opj5b42Mm_9adVGoIIyr8dFqRGCXbUoSa7itpAIPlo/1639974190/sites/default/files/inline-images/uthayaneethi.jpg)
அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'ஆர்டிகிள் 15' தமிழில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது.
தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். ‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்திவரும் படக்குழு, தற்போது டப்பிங் பணியைத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டப்பிங் பணியை நேற்று (19.12.2021) தொடங்கியுள்ளார். விரைவில் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.