இயக்குனர் மகிழ் திருமேனி உருவாக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தமிழில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் தடம். தற்போது இந்த படத்தை ரெட் என்னும் தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.
![arun vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/I8TDvXPNy7TT8NxxprnXxLrjxSQ6A6Fs-gqdcf1GBQk/1572588885/sites/default/files/inline-images/arun-vijay_4.jpg)
தடம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக பெரும் விலைக்குத் தெலுங்கு ரீமேக் உரிமை விற்பனையானது.
சமீபத்தில் 'இஸ்மார்ட் ஷங்கர்' வெற்றியின் மூலம் முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் பொத்தினேனி 'தடம்' ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.
கிஷோர் திருமலா இயக்கும் இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், மாளவிகா ஷர்மா ஆகியோர் ராமுடம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின் பூஜை அக்டோபர் 30 நடைபெற்றது. இதில் 'இஸ்மார்ட் ஷங்கர்' இயக்குநர் பூரி ஜெகன்நாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.