Skip to main content

மூத்த கதையாசிரியர் கலைஞானம் பிறந்தநாள்... நக்கீரன் ஆசிரியர் நேரில் வாழ்த்து (படங்கள்)

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கியவர் கலைஞானம். தமிழ்த் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த கலைஞானம், இன்று (15.07.2021) தன்னுடைய 92வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கலைஞானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நக்கீரன் ஆசிரியர். இன்று காலை தனது துணைவியாருடன் சென்ற நக்கீரன் ஆசிரியர், கலைஞானம் குடும்பத்தினரைச் சந்தித்தார். அப்போது கலைஞானம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்