![vdsgs](http://image.nakkheeran.in/cdn/farfuture/6lyJR4Qb2AMBeST0y0rrQh2MoT3G6TFvl1KDppoVRr4/1610951310/sites/default/files/inline-images/unnamed_15.jpg)
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான துள்ளுவதோ இளைமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் இப்படத்திற்கு 'நானே வருவேன்' பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தனுஷுடன் படிக்காதவன் மற்றும் வேங்கை படங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.