Skip to main content

சூர்யா பிறந்தநாளுக்கு விருந்தளிக்கும் கங்குவா படக்குழு

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

suriya kanguva update

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருட தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்பு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் வருகிற 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக வெளியாகவுள்ளது. இதை படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்