Skip to main content

14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி 

Published on 12/09/2024 | Edited on 12/09/2024
sundar c vadivelu joins for gangers movie

சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் ‘கிரி, ‘வின்னர்’, ‘லண்டன்’, ‘ரெண்டு’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘நகரம் மறுபக்கம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து சில காரணங்களால் இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்தனர். 

இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் வடிவேலுவின் பிறந்தநாளான இன்று (12.09.2024) இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வடிவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிடப்பட்டுள்ளது. ‘கேங்கர்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை சுந்தர்.சி இயக்குறார். அவரது அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை வழங்குகிறது. இப்படத்தில் கேத்ரின் தெரசா, முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் சத்யா இசையமைக்கிறார்.

சுந்தர்.சி மற்றும் வடிவேலு இடம்பெற்றுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வடிவேலுவின் தோற்றம் அவரின் முந்தைய படங்களின் தோற்றத்தைவிட வித்தியாசமாக இடம்பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் கேங்கர்ஸ் என்ற தலைப்பில் கால்பந்து மற்றும் விசில் போன்ற விளையாட்டு தொடர்பான பொருட்கள் இடம்பெற்றுள்ளதால், இப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகுவதாக தெரிகிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வடிவேலு - சுந்தர்.சி கூட்டணி இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சார்ந்த செய்திகள்