விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் உருவான படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் என்றும் மற்ற மொழிகளில் பராஷக்தி(PARASHAKTHI) என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.
பின்பு மாலை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலுமே பராசக்தி(PARASAKTHI) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இப்படங்கள் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி தெலுங்கில் பராஷக்தி(PARASHAKTHI) என்ற தலைப்பை கடந்த ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சான்றிதழை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பராஷக்தி படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
pic.twitter.com/KRw6RUfWw3— vijayantony (@vijayantony) January 29, 2025