Skip to main content

வளர்ந்து வரும் நடிகர்களுடன்  கைகோர்த்த இயக்குநர் ராஜேஷ் 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

shanthanu and mugen joins diretor rajesh web series

 

தமிழ் சினிமாவில் காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குநர் ராஜேஷ் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'கடவுள் இருக்கான் குமாரு', 'வணக்கம் டா மாப்ள' உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தில் பிரபலமானார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே இயக்குநர் ராஜேஷ் நடிகர் சாந்தனு மற்றும் முகென் ராவ் நடிக்கும் இணைய தொடரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி மற்றும் ஜனனி ஐயர் நடிக்க, சக்தி பஞ்சு சுப்பு, லக்கி நாராயணன், அபிஷேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் பணிகள் தொங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் முறையாக இணைந்த அதர்வா - அதிதி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
atharvaa aditi shankar movie update

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இப்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ' படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், அதர்வா நடிக்கும் புதுப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம். ராஜேஷ் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி. ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற்போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார்.

Next Story

“அப்பாவின் கண்ணீரை இந்த படம் துடைச்சிருக்கு” - எமோஷனலான ஷாந்தனு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
shanthanu speech in blte star success meet

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அஷோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

அதில் ஷாந்தனு பேசுகையில், “இந்த வெற்றிக்காக நான் 15 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் கூட என்னால் இதை நம்பமுடியவில்லை. இப்படி ஒரு நல்ல விஷயம் என் வாழ்வில் நடக்கிறதா..?, என் மனைவியிடம் கூட நேற்று என்னால் நம்பமுடியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தேன். சக்சஸ் மீட்டில் சந்திப்போம் என்று பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறோம். ஆனால் சக்சஸ் மீட் என்பது இதுதான் என் வாழ்வில் முதல்முறை. ப்ருத்வி பேசிய அனைத்தும் எனக்கும் பொருந்தும். இப்படத்தின் வெற்றி எப்படிப்பட்ட படத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது.  மேலும் என் அப்பா அம்மாவை சந்தோசப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு இந்த ப்ளூ ஸ்டார் கொடுத்திருக்கிறது.

ராஜேஷ் என்னும் இந்தக் கதாபாத்திரம் இன்று இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ் பிரபா மற்றும் இயக்குநர் ஜெயக்குமார் இருவரும் தான். அவர்களுக்கு பெரிய நன்றி.  எழுத்தாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் முதலில் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. இப்பொழுது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் அது மீண்டும் நிரூபனமாகி இருக்கிறது. என் அப்பா, எத்தனையோ நடிகர்களுக்கு நான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்… ஆனால் என் மகனுக்கு என்னால் அப்படி ஒரு வெற்றியைக் கொடுக்க முடியவில்லையே என்று கண்கலங்கி இருக்கிறார். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அந்தக் கண்ணீரைத் துடைத்திருக்கிறது. அதற்காகவும் இப்படக்குழுவினருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து என் அப்பா இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது மிகவும் எமோஷனலாக இருந்தது” என்றார்.