![santhanam 80's Buildup Teaser released](http://image.nakkheeran.in/cdn/farfuture/MK0CEeMZpyKG355kywmZI8ru_Ef4D6AEWiS4aDctAmg/1699104733/sites/default/files/inline-images/181_25.jpg)
'குலேபகாவலி', 'ஜாக்பாட்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'பில்டப்'. ராதிகா ப்ரீத்தி, கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படதிற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சந்தானம் கமலின் தீவிர ரசிகராக வருகிறார். அவரது தத்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுந்தர் ராஜன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார். ஒரு கட்டத்தில் கமல் படம் வெளியாகும் நாளில் சுந்தர் ராஜன் மறைந்து விடுகிறார். அதற்கு பின்பு நடக்கும் சம்பவங்களை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது.
மேலும் ஆனந்தராஜ் பெண் வேடத்தில் 'மஞ்ச கிளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது வேடம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.