Skip to main content

“என்னை அடித்து சித்ரவதை செய்தார்”- சிம்பு பட நடிகை பரபரப்பு...

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

கடந்த 2008ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சனாகான். 
 

simbu sanakhan

 

 

இதன்பின் தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான சனா கான், தமிழில் வாய்ப்பு குறைந்ததும் மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். 

கடந்த 2012ஆம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சனாகான் மீண்டும் பிரபலமடைந்தார். இதை வைத்து ஹிந்தியில் மீண்டும் ஒரு வலம் வந்தார். 

நடிகை சனா கானும் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸும் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். 

இந்நிலையில் சனாகான் தன்மீது தொடர்ந்து அவதூறு கூறி பிளாக்மெயில் செய்கிறார் என்று மெல்வின் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சனாகான், “நான் பிளாக்மெயில் செய்யவில்லை. காதலை முறித்தபோது அவர் முன்னால் தைரியமாக நின்றேன். அப்போது என்னை சமாதானம் செய்து மனதை மாற்ற முயன்றார். நான் அவரது பேச்சை கேட்கவில்லை. அவர் என்னை அடித்து உதைத்து இருக்கிறார். அப்போது எனது தலையில் ரத்தம் வழிந்தது. முகத்திலும் அடித்து காயப்படுத்தினார். அந்த புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.

என்னை அடித்து சித்ரவதை செய்த கொடுமைகளை அம்பலப்படுத்துவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். அதை பதிவுசெய்து வைத்து நான் பிளாக்மெயில் செய்வதாக குறை சொல்கிறார்” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்