Skip to main content

“அது தளபதி 64 டைட்டிலா? எங்களுக்குதான் அந்த தலைப்பு சொந்தம்”- இயக்குனர் ரஞ்சித் அதிர்ச்சி

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவிலுள்ள சிமோகா மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் சிறப்பு அனுமதி பெற்று ஷூட் செய்ய இருக்கிறது.  ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தலைப்பு எதையும் படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்திற்கு சம்பவம் என்று படக்குழு பெயர் வைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.
 

sambavam


இந்நிலையில் சம்பவம் பட டைட்டில் எங்களுக்கு சொந்தமானது என்று இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் தெரிவித்துள்ளார். மைனா, சாட்டை உள்ளிட்ட படங்களை ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்த ஜான் மேக்ஸ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். சம்பவம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ரஞ்சித் பாரிஜாதம் என்னும் புதுமுக இயக்குனர் இயக்குகிறார். 
 

iruttu


இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின்களாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் பல நடிகர்கள் இவர்களுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சம்பவம் தலைப்பு குறித்து, இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது,  ‘நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். 
 

jada


சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து, இப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்