![samantha](http://image.nakkheeran.in/cdn/farfuture/4yvtLxIz4XotyfphT86M6YVHqnw-toNo0dqBi9X3Bv8/1538226294/sites/default/files/2018-09/dog5svruyaam7i2.jpg)
![samantha](http://image.nakkheeran.in/cdn/farfuture/wXaUXoc_voEhkuxB8fgX97Br6Y9sgSY2tXK-hBQPCWs/1538226294/sites/default/files/2018-09/dn8wjtwu0aaqp_x.jpg)
![samantha](http://image.nakkheeran.in/cdn/farfuture/AckeMNCSEGcc_Zy_ItcCbXdJwwZLOXBSTElF-kxikWk/1538226294/sites/default/files/2018-09/dog5ubjuuaa_t7q.jpg)
![samantha](http://image.nakkheeran.in/cdn/farfuture/isgN04ypZv-L-Z0Q20M70kXSsTVvCLX16UceDE4Bqx0/1538226294/sites/default/files/2018-09/dog5tlxuyaal-7.jpg)
![samantha](http://image.nakkheeran.in/cdn/farfuture/zA0qz9MWYc_JCeASbEnlPDEcJltdDr55vmCFeLYXb5g/1538227272/sites/default/files/2018-09/dog4mn0xsaaq2jr.jpg)
திருமணத்திற்கு பிறகும் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்துவரும் நடிகை சமந்தா அதை கொண்டாடும் விதமாக தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஊர் ஜாலியாக சுற்றிவரும் இவரின் படுகவர்ச்சியான புகைப்படங்களை ட்விட்டரில் சமீபத்தில் வெளியிட்டார். இதையடுத்து இந்த படங்களுக்கு பல லட்சத்துக்கு மேற்பட்ட லைக்குகளும், கமெண்டுகளும் வந்தன. அந்த கமெண்டுகளில் நாகார்ஜுனாவின் குடும்ப ரசிகர்கள் சமந்தாவை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இந்த கமெண்டுகளுக்கு கடும் கோபமடைந்த சமந்தா தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். அதில்.... "இது என்னுடைய வாழ்க்கை. திருமணம் நடந்திருந்தாலும் என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று நான் தான் முடிவெடுப்பேன். நீங்கள் யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று கோபத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.