Skip to main content

தீபாவளிக்கு வெளியாகிறதா பா. ரஞ்சித் பட பர்ஸ்ட் லுக் ?

Published on 03/11/2020 | Edited on 03/11/2020
pa.ranjith

 

 

கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் படம்  சல்பேட்டா. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின்   கதை என்பதால், ஆர்யா தீவிர உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். அப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வைரலானது.

 

தற்போது சல்பேட்டா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், இயக்குனர் ரஞ்சித்துடன் குத்துச்சண்டை போடுவது போன்ற படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, படக்குழுவினரையும்  பாராட்டியுள்ளார் ஆர்யா. அதில் "இந்த அருமையான படத்திற்கு நன்றி பா.ரஞ்சித். இதைவிட  சிறந்த விளையாட்டை பற்றிய  படத்தை  நான் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் மிகச்சிறந்தவர்" எனக் கூறியுள்ளார். மேலும் "முரளி சார் நீங்கள் எங்கள் எல்லாரையும் விட வேகமானவர், காட்சி விருந்துக்கு நன்றி. நீங்கள் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டிர்கள். என் தயாரிப்பாளர் கே 9 ஸ்டுடியோஸ் மட்டும் இல்லையென்றால் இந்த படத்தை நினைத்து கூட பாத்திருக்க முடியாது. கலையரசன், ஜான் விஜய், பசுபதி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிறைய கற்றுக்கொண்டேன்" எனவும் ஆர்யா தெரிவித்துள்ளார்.       

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்  விரைவில் வெளியாகும் எனவும் ஆர்யா அந்த ட்விட்டில் தெரிவித்துள்ள நிலையில்,படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சல்பேட்டா படம்,1980களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்