Skip to main content

நச்சுன்னு 'நாட்டு கூத்து' பாடலை வெளியிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழு!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

rrr movie naattu koothu song released now

 

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர் படத்தின் நட்பு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படக்குழு 'நாட்டு கூத்து' என்ற பாடலை வெளியிட்டுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடனத்தில் கலக்கியுள்ள இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்