பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ரஜமௌலி இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். தெலுங்கின் முன்னணி நடிகரக்ளான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 300 கோடி செலவில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தின் கதை களம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜு ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தது என்று படக்குழு அறிவித்தது.
சுமார் 350 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்த படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பணிகள் விரைவில் முடிவதாக இல்லை என்பதால் அடுத்த வருட சங்கராந்தியை குறி வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
#RRRMotionPoster - Tamil - இரத்தம் ரணம் ரௌத்திரம்https://t.co/iu5T1P5RJg@ssrajamouli @tarak9999 #RamCharan @aliaa08 @ajaydevgn @DVVMovies #RRRMovie @madhankarky @thondankani pic.twitter.com/rlueNeNLSO
— RRR Movie (@RRRMovie) March 25, 2020
தற்போது கரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு படத்தின் டிசைன் லோகோவுடன் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அறிவித்ததை அடுத்து மதியம் 12 மணிக்கு படம் வெளியாக போகும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் மூன்று ஆர்க்கு அர்த்தம் வெளியாகியுள்ளதும் இரத்தம், ரணம், ரௌத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.