Published on 20/02/2023 | Edited on 20/02/2023
![Robo Shankar parrot issue 2.5 lakhs fined by Forest Department](http://image.nakkheeran.in/cdn/farfuture/0MZaLfhbmwGC4QXxOnxJgL_-89OBED3Go9c_CspD4ug/1676888094/sites/default/files/inline-images/22_80.jpg)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி தற்போது சினிமாவில் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரோபோ சங்கர். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ரோபோ சங்கர், இரண்டு அலெக்சாண்டரியன் ரக பச்சை கிளிகளையும் வளர்த்து வந்துள்ளார்.
அந்த இரு பச்சை கிளிகளையும் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வருவதாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் கடந்த 15ஆம் தேதியன்று பறிமுதல் செய்தனர். அதனை கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைத்து, இது தொடர்பாக ரோபோ சங்கர் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டிருந்தனர். அந்த விளக்கத்தின் அடிப்படையில் ரோபோ சங்கருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.