![rathnakumar direction santhanam starrer 'gulugulu' movie teaser released](http://image.nakkheeran.in/cdn/farfuture/A5toxe9h4aXZQUl3j0rgRXAjRrc8y_6oAVYISjdIHBI/1657715127/sites/default/files/inline-images/113_18.jpg)
தமிழில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் தற்போது 'ஏஜென்ட் கண்ணாயிரம்' மற்றும் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் ரத்னா குமார் இயக்கும் 'குலுகுலு' படத்தில் நடித்துள்ளார். ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் 'குலுகுலு' படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. நாடு நாடாக பயணிக்கும் சந்தானத்திடம் கடத்தல் தொடர்பாக ஒரு கும்பல் உதவி கேட்கிறது. அந்த கும்பலுடன் சந்தானம் பயணிப்பதை காமெடி கலந்து திரில்லிங்காக சொல்லியிருப்பது போல் இந்த டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.