Skip to main content

'தனுஸ்ரீ தத்தா படப்பிடிப்பில் அதிக போதையில் இருந்தார்' - தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாருக்கு ராக்கி சாவந்த் பதிலடி  

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
rakhi sawant

 

நடிகைகள் பலரும் தைரியமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வாய் திறந்து வரும் நிலையில் தற்போது விஷாலின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்த தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தில் நடித்தபோது நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன் குடும்பத்தினருடன் சென்றபோது நானாபடேகர் ஆட்கள் தன்னை தாக்கினார்கள் என்றும் புகார் கூறியிருந்தார்.மேலும் நானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார். என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். தனுஸ்ரீ தத்தா கூறிய இந்த பாலியல் புகாருக்கு பல்வேறு பாலிவுட் நடசத்திரங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தனுஸ்ரீதத்தாவை விமர்சித்து நடிகை ராக்கி சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார். அதில்....

 

 

 


"தனுஸ்ரீ குற்றம்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். என்னிடம் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்று நானா படேகர் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீதத்தா நான்கு மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னை ஆட அழைத்து இருந்தார்கள். தனுஸ்ரீ அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார். அவரைப்பற்றி கவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்" என்றார். இதற்கிடையே கடந்த 2008ல் படப்பிடிப்பு அரங்குக்கு வெளியே தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து உடைத்தும் டயரை கிழித்தும் சேதப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பல்வேறு வழிகளில் கொலை முயற்சி" - இந்தி நடிகை மீண்டும் புகார்

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

 Attempted murder in various ways Tanushree Dutta complaint again

 

இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தான் பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என குற்றம் சாட்டினார். இதனையடுத்து சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் மிகவும் துன்புறுத்தப்பட்டு மோசமாகக் குறிவைக்கப்படுவதாகப் பரபரப்பைக் கிளப்பினார். மேலும் தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு நானா படேகர்தான் காரணம் என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அதில் ஏற்கனவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததை குறிப்பிட்டுள்ளார். அந்த பேட்டியில், "'என்னை கொலை செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடந்து வருகின்றன. முதலில் எனது வீட்டின் பணிப்பெண்ணின் மூலம் குடிநீரில் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் கலக்கச் செய்தனர். இது கடுமையாக அனைத்து வகையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. பிறகு நான் உஜ்ஜயினிக்கு தப்பிச் சென்றேன். அப்போது எனது வாகனத்தின் பிரேக் இரண்டு முறை சேதமடைந்து விபத்துக்குள்ளானது" என பேசியுள்ளார்.  

 

 

Next Story

"எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர் தான் காரணம்" - 'காலா' பட பிரபலம் மீது நடிகை குற்றச்சாட்டு

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

actress Tanushree Dutta complaint on actor Nana Patekar

 

தனுஸ்ரீ தத்தா, இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்பு 2010-ஆம் ஆண்டிற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தனுஸ்ரீ தத்தா சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் மிகவும் துன்புறுத்தப்பட்டு மோசமாகக் குறிவைக்கப்படுவதாகப் பரபரப்பைக் கிளப்பினார். 

 

இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தற்போது மீண்டும் ஒரு பதிவை பகிர்ந்து பரப்பை உண்டாக்கியுள்ளார். இது தொடர்பாக தனுஸ்ரீ தத்தா வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு ஏதேனும் நேர்ந்தால், (metoo) மீடூ விவகாரத்தில் நான் குற்றம் சாட்டப்பட்ட நானா படேகர், அவரது வழக்கறிஞர்கள் மற்றும் பாலிவுட் மாஃபியா நண்பர்கள் இவர்கள் அனைவரும் தான் காரணம். பாலிவுட் மாஃபியா என்றால் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் அனைவரின் பெயர்களும் அடிக்கடி வந்த அதே நபர்கள் தான்.  அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள், அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுங்கள். கொடூரமாகப் பழிவாங்கும் எண்ணத்துடன் பின்தொடராதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும், "என்னைப் பற்றி போலிச் செய்திகளைப் பரப்பிய அனைத்து தொழில்துறை நபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமும் நீதியும் என்னைத் தவறவிட்டிருக்கலாம் ஆனால் இந்த மாபெரும் தேசத்தின் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.  ஏற்கனவே கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஸ்ரீ தத்தா ஒரு பேட்டியில், தான் 2009-ஆம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் எனப் குற்றம் சாட்டியிருந்தார். பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. நானா படேகர், தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'காலா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.