"ஹலோ தலைவரே, கொங்கு மண்டல சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட முதல்வர், அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் புதிய, புதிய திட் டங்களை அறிவித்து, எதிர்க்கட்சி களைத் திகைக்க வச்சிருக்கார்.''”

"ஆமாம்பா, நகைப்பட்டறைத் தொழில் வளாகம் ஒன்றையும் அங்கே அமைத்துத் தருவதாக முதல்வர் அறிவிச்சிருக்காரே!''”

rr

Advertisment

"உண்மைதாங்க தலை வரே, முதல்வரின் கோவை விசிட்டைப் பொறுத்தவரை, அமைச்சர் செந்தில் பாலாஜிதான் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். அங்கே கெம்பட்டி பகுதியிலுள்ள நகைப்பட்டறைகளுக்கு முதல்வரை நேரடியாக அழைத்து சென்று, அதை நம்பி இருக்கும் தொழிலாளர் களின் நிலையை அமைச்சர் காட்டியதால், 129 கோடி ரூபாயில் சிப்காட் போல, நகைப் பட்டறைத் தொழிற்சாலை வளா கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை முதல்வர் அங்கே அறிவித்து, பலரின் சபாஷையும் பெற்றிருக்கிறார். கோவை யைப் பொறுத்தவரை நகைப்பட்டறைத் தொழிலை நம்பி ஏறத்தாழ 50 ஆயிரம் குடும்பங்கள் இருக்கு. இவர்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்ப நினைத்த, பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அவர்களுக் காகவே பிரதமரின் விசுவகர்மா திட்டம் கொண்டுவரப்பட்டது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முயன்றார். அவரது இந்த முயற்சியை முறியடிக்கும் விதத்தில்தான், அமைச்சரின் வியூகப்படி, இப்படியொரு திட்டத்தை முதல்வர் அறிவித்து, நகைப் பட்டறைத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் தன்பக்கம் திருப்பியிருக்கிறார் என்கிறார்கள். இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளையும் முதல்வர் தீர்த்துவைப்பார் என்கிறார்கள்.''”

"இந்த நேரத்தில், தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவரின் தம்பி பற்றிய தகவல் ஒன்று, முதல்வர் வரை போய் அதிரவைத்தி ருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, யு-டியூபர் ஒருவர், தமிழக அரசையும் தமிழக முதல்வர் உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலரை யும் கண்டமேனிக்கு விமர் சித்ததோடு, காவல்துறை உயர் அதிகாரிகளையும் கடுமையாகத் தாக்கினார். இதைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. அதிரடிக் கைது நடவடிக்கைக்கும் ஆளாகி, சிறை வாசத்தையும் அனு பவித்தார். இந்த நிலையில் அவரை ஜாமீனில் எடுக்க வழக்கறிஞர்கள் பலரும் ஆஜரானார்கள். அவர்களுக்காக லட்சக் கணக்கில் செலவு செய்யப்பட்டது. இப்படி செலவு செய்துதான் அவரை ஜாமீனில் வெளியே எடுத்தார்கள். வெளியே வந்தபிறகும் அவர், முதல்வர் மீதான தாக்குதலை நிறுத்த வில்லை. இப்படிப்பட்ட யூடியூபரின் சட்டப் போராட்டங்களுக்காக ரூபாய் 60 லட்சத்துக்கு மேல் செலவு செய்தவர், ஒரு மூத்த அமைச்ச ரின் தம்பிதானாம். இந்தத் தகவலை உளவுத் துறையினர் முதல்வர் ஸ்டா-ன் பார்வைக்குக் கொண்டு சென்றபோது, அவர் திகைத்துப் போய் விட்டாராம். இந்தத் தகவல் அமைச்சர் கள் தரப்பிற்கும் தெரியவர, அவர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார்களாம்.''”

Advertisment

"விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதான தி.மு.க.வின் ஆதங்கம் இன்னும் தொடர்கிறதே?''

rr

"விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாங்கள் தி.மு.க. கூட்டணி யில்தான் தொடர்கிறோம் என்று கூறிவந்தாலும், அவர் கட்சியினரும் இதையே எதிரொ-த் தாலும், தி.மு.க.வுக்கு எதிராகவே இயங்கிவரும் அக்கட்சியின் துணைச்செயலாளர் அர்ஜுன் ரெட்டி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படாததில் தி.மு.க. தரப்பு, ஆதங்கத்தோடு தான் இருக்கிறது. திருமாவின் அர்ஜுன் ரெட்டி மீதான பிடிப்பைப் பார்த்த எடப்பாடி, தேர்தல் நேரத்தில் எப்படியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்கள் கூட்டணிக்கு வந்துவிடும் என்று அழுத்தமாக நம்புகிறாராம். இதற்கிடையே திருமா, அர்ஜுன் ரெட்டிக்கு கொடுத்துவரும் இடத்தால், முதல்வரே... கூட்டணி குறித்து நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் எங்களுக்கு வருத்தமில்லை என்று திருமாவிடமே சொல்-விட்டாராம். எனவே அர்ஜுன் ரெட்டி போக்கால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொடர்ந்து தத்தளித்து வருகிறது.''”

"அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் பரபரப்பா நடந்திருக்குதே?''”

rr

"அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் 6ஆம் தேதி சென்னையிலுள்ள கட்சியின் தலைமை யகத்தில் நடந்தது. விஜய் கட்சி பற்றியும் கூட் டணி பற்றியும், இதில் தன் முடிவை எடப்பாடி அறிவிப்பார்ங்கிற பரபரப்பு எல்லோரிடமும் இருந்ததாம். ஆனால், அதுபற்றி எல்லாம் எதை யும் தெரிவிக்காத எடப்பாடி... தி.மு.க., பா.ஜ.க. தவிர வேறு எந்தக் கட்சியையும் விமர்சிக்காதீர் கள் என்று அந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகி களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் இங் குள்ள பா.ஜ.க. மாநிலத் தலைவரின் ஆதரவாளர் கள், அ.தி.மு.க.வைத் தொடர்ந்து தாக்கி, இரு கட்சிகளுக்கு இடையிலும் கூட்டணி உருவாகி விடக்கூடாது என்பதுபோல் நடந்துவருகின்ற னர். இந்த நிலையில்... கட்சியின் பலத்தை அறிந்துகொள்ள, எடப்பாடி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் நடத்த இருக்கிறாராம். அப்போது பெருமளவு கூட்டத்தை மா.செ.க்கள் திரட்டவேண்டும் என்று நினைக்கிறார். எனவே, இது குறித்து இந்தக் கூட்டத்தில் அவர் தீவிரமாக விவாதித்திருக்கிறார்.''”

"லண்டனில் இருக்கும் பா.ஜ.க. மாநில நிர்வாகி, அங்கிருந்தபடியும் அ.தி.மு.க. அட்டாக்கை நடத்தி வருகிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அண்மையில் அவர் பாண்டேவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதத்தில் 14 சதவீதம் இப்போது சரிந்துள்ளது என்ற ரீதியில் கருத்து சொல்-யிருக்கிறார். இதை அமித்ஷா உள்ளிட்டவர்கள் விரும்பவில்லையாம். வரும் தமிழக சட்டமன்றத் தேர்த-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று காய் நகர்த்திவரும் அமித்ஷாவை, இது ஏளனம் செய் வது போல் இருப்பதாக அவர் கருதுகிறாராம். எனவே அந்த மாநில நிர்வாகியின் அ.திமுக எதிர்ப்புணர்வே அவரது பதவியைப் பறிக்கும் என்கிறார்கள் கமலாலயத் தரப்பினர். இதற் கிடையே அந்த மாநில நிர்வாகியின் ஆதர வாளரான கேசவ விநாயகம், அந்த நபர் இல் லாததால் பா.ஜ.க. இங்கே கோமா நிலைக்குப் போய்விட்டதாகக் காட்ட நினைத்து, கட்சியின் தேசியத் தலைமை கொடுக்கும் அத்தனை அசைன்மெண்ட்டையும் அலட்சியப்படுத்து கிறாராம். இதுவும் டெல்-த் தலைமையை சூடாக்கியிருக்கிறதாம். எனவே, தனது பதவியின் நிலைகுறித்து தெரிந்த பிறகே அந்த பா.ஜ.க. நிர்வாகி, தமிழகம் திரும்புவார் என்கிறது அவர் தரப்பு.''”

"கொடநாடு வழக்கு மீண்டும் சூடு பிடிக்கிறதே?''”

ff

"கொடநாடு கொலை வழக்கில் தொடர் புடைய சஜீவன் தலைமறைவாகியிருக்கிறார். அவர் துபாயில் தங்கியிருப்பதாகத் தகவல் கசிந்தது. இந்த நிலையில் அவரைக் கைது செய்ய, சர்வதேச போலீஸின் உதவியை தமிழக காவல்துறை நாடியது. இதன் விளைவாக இப்போது சர்வதேச போலீஸ் சஜீவனை நெருங்கிவிட்டதாம். அவர் பிடிபட்டு, தமிழகம் அழைத்து வரப்பட்டவுடன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கும், அவர் மீது உபரியாக இருக்கும் வன விலங்குகளைக் கொன்ற வழக்கும் தீவிரமாக விசாரிக்கப்பட இருக்கிறது. கொடநாடு வழக்கு இந்தமுறை தமிழக அரசிய-ல் அதிரடிக் காட்சிகளை அரங்கேற்றும் என்று விசாரணை டீம் சொல்கிறது. இது எடப்பாடி தரப்பை அதிர வைத்திருக்கிறதாம். இதற்கிடையே சென்னை மற்றும் தாம்பரம் காவல்துறை ஆணையர்களின் கட்டுப்பாட்டில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டிவரும் நிலையில், ஆவடி பகுதியில் மட்டும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அதிகரித்திருப்பது, காவல்துறை மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.''”

"அ.தி.மு.க. ஆட்சியின் வீட்டு வசதித் துறையில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இப்போது ஒத்து ழைப்பு கிடைக்கவில்லை என்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது கூட்டுறவு வீட்டுவசதித் துறையில் துணை பதிவாளராக இருந்து ஓய்வுபெற்றவர் நித்தியா னந்தம். அவரது பணிக்காலத்தில், கூட்டுறவு வீட்டு வசதி துறையில் கட்டிடம் கட்டுதல் மற் றும் துறைரீதியான திட்டங்களை நடைமுறைப் படுத்தியதில், பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து அப்போதே எடப்பாடி அரசுக்கும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார்கள் போனது. ஆனால், எடப்பாடி அரசோ, பெயரளவில் போலீஸ் என்கொயரியை நடத்தி அவரைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து, ஓய்வுபெற அனுமதித்து விட்டது. இந்த நிலையில், அந்த ஊழல் தொடர்பான புகார்கள் உரிய ஆதாரங் களோடு, தற்போதைய திமுக ஆட்சியில், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வர, இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப் புத்துறை அதிகாரிகள், கோட்டையில் உள்ள வீட்டுவசதித் துறையின் அதிகாரிகளை அணுகி, நித்தியானந்தம் தொடர்பான கோப்புகளைக் கேட்டிருக்கிறார்கள். துறை அதிகாரிகளோ கோப்புகளைத் தராமல், தொடர்ந்து இழுத்தடித்து வருகிறார்களாம். காரணம், அந்த நித்தியானந்தத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் ஆதரவாக இருப்பதால்தான், அவர் தொடர்பான கோப்புகள் நகர மறுக்கின்றன என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.''”

"போக்குவரத்துத்துறையில் நிறைய புகார்கள் கிளம்புகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, உதாரணத்துக்குச் சொல்லணும்னா, போக்குவரத்து துறையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பல ஆண்டு களாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டி ருக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போதே இவர்கள் பதவி உயர்வு பெற்று வட்டார போக்குவரத்து அலுவலர்களாக பதவி வகித்திருக்க வேண்டும், ஆனால் அவர்களை அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த மாதம் 41 மோட்டார் வாகன ஆய்வாளர் களுக்குப் பதவி உயர்வு கொடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களாக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தனர். ஐந்து வருடம் காலம் தாழ்ந்து கிடைத்த பதவி என்றபோதும், இவர்களை இன்னும் பணியில் அமர்த்த வில்லை. நியமன அரசாணை வெளியிடவே இவர்களிடம் நெருக்கடி கொடுக்கப்பட்டி ருக்கிறது. இவர்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஏ, பி, சி, டி என்று தரம் பிரித்து அதற்கேற்ப நியமனம் செய்யவுள்ள தாகவும், இப்படித் தரப் பிரிப்பிலும் அவற்றிற்கு ஏற்ப மேற்படி நடக்கவிருப்பதாகவும் தகவல் கசிகிறது. இதனால், சம்பந்தப்பட்டவர்கள் ’எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைகள் அடுக்கடுக்கா வருது’ என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.''”

"உயர் கல்வித்துறையில் ஒரு அதிகாரியின் அதிகாரம் மட்டும் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறார்களே?''”

"உயர் கல்வித்துறையில் துணைச் செயலாளராக இருப்பவர் ரவிச்சந்திரன். துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் ஐ.ஏ.எஸ். இருந்தும், ரவிச்சந்திரனின் ஆதிக்கம் தான் கொடிகட்டிப் பறக்கிறதாம். அதிகாரிகள் பலரையும் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று மிரட்டி, வசூல் வேட்டையில் இவர் இறங்கியிருக்கிறார் என்றும், அதிகாரிகள் பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்களை கோபால் ஐ.ஏ.எஸ்.சிடம் சொல்-, அவரை ஏமாற்றி வருவதாகவும் துறையிலுள்ள அலுவலர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. தங்கள் மீது துறை வாரியாக எடுக்கப்பட்ட பணிநீக்கத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று, தங்கள் மீது தவறில்லை என்று தீர்ப்பு பெற்று மீண்டும் பணியில் சேர்ந்துள்ள பலரையும், "ஒழுங்கா இருங்கள். இல்லையேல் பணி நீக்கத்தை ரீஓபன் செய்துவிடுவேன்'’என்று மிரட்டிவருகிறாராம். இவர் துறையின் ஊழியர்களை அடிமைபோல நடத்துவதாகவும் கோட்டை வரை புகார்கள் போயிருக்கிறதாம்.''”

"தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தில் புதிய பரபரப்பு தெரியுதே?''”

"தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தில் நடக்கும் பல்வேறு ஊழல்களைப் பற்றி கடந்த சில வாரங்களுக்கு முன்பே நாம் அம்பலப்படுத்தினோம். குறிப்பாக, சிண்டிகேட் உறுப்பினர் நாராயணன் தலைமையில் இயங்கும் மூவர் அணி, நடத்திவந்த அத்தனை ஏடா கூடங்களையும் அப்போது வெளிப்படுத்தி னோம். நமது செய்தியைத் தொடர்ந்து உயர்கல்வித் துறையின் அப்போதைய முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கிடையே துறை அமைச்சரும் துறையின் முதன்மைச் செயலாளரும் மாற்றப்பட்டுவிட்டனர். இதில் குஷியான நாராயணன் அண்ட் கோ, நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிகளின் புதுப்பிப்புப் பணிகளை, நடத்தித் தரவேண்டும் என, சமீபத்தில் துறையின் அமைச்சரான கோவி.செழியனை அணுகியுள்ளது. இந்த சந்திப்புக்கு பதிவாளர் ராஜசேகர் ஏற்பாடு செய்தாராம். அமைச்சரோ, "இங்கே ஊழல்கள் நடந்திருப்பதாக புகார்கள் இருக்கிறதே. அதுகுறித்து விசாரித்து வருகிறோம். அதெல்லாம் முடிந்த பிறகுதான் கல்லூரிகளின் புதுப்பிப்பு குறித்து முடிவெடுக்க முடியும்' என்றபடி, அவர்களை அனுப்பி வைத்துவிட்டாராம். இதனால் நொந்துபோன அந்த மூவர் அணி, துறையின் செயலாளர் கோபால் மூலம் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடியுமா? என ஆலோசித்து வருகிறதாம். இது அங்கே பரபரப்பை ஏற்படுதிவருகிறது.''”

"என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலை, நானும் இங்கே பகிர்ந்துக்கறேன். முதல்வரின் உறவினர் எனச் சொல்-வரும் முதல்வர் அலுவலக இணை இயக்குநர் மாறனும், மற்றொரு இயக்குநரான மேகவர்ணமும் இணைந்து அமைச்சர் அலுவலகங்களில் விரும்பத்தகாத பல காரியங்களைச் செய்து வருகிறார்களாம். அவர்களின் விருப்பத்துக்கு ஒத்துழைக்காத அமைச்சர்கள் பற்றி, பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறார்களாம். மேலும், துணை முதல்வர் உதயநிதியின் அலுவலகத்தில் உதவி இயக்குநராக உள்ள சீனிவாசனுக்கு சென்னையில் பணி செய்த அனுபவம் இல்லாததால், இவர்கள் அவரது அலுவலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களாம். விரைவில் இவர்கள் ஓய்வுபெற இருப்ப தால், கிடைத்த வரை லாபம் என்று, இஷ் டத்துக்கும் விளையாடி வருகிறார் கள் என்றும் கோட்டை வட் டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடு கிறது.''’

______________

இறுதிச் சுற்று!

ff

ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோவின் பேத்தியும், ம.தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை.வைகோவின் மகளுமான வானதிரேணுவுக் கும் சென்னையைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பவ ருக்கும் நவம்பர் 7-ம் தேதி வியாழக்கிழமை திருமணம் நடந்தது. நக்கீரன் ஆசிரியர் துணைவியாருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் தினார். முதல்நாள் நடந்த வரவேற்பு நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-ன், துரை முருகன், கனிமொழி சகிதம் வந்து மணமக்களை வாழ்த்தினர். ஸ்டா-னை மண்டபத்தின் வாச--ருந்து வரவேற்று மேடைக்கு அழைத்துவந்தார் வைகோ. மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். ஸ்டா-னுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார் துரை.வைகோ. இந்த திருமண நிகழ்வில் ம.தி.மு.க. தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். கடந்த ஒரு வாரத் திற்கு முன்பு கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் பேசிய வைகோ, "திருமணத்துக்கு பத்திரிகை வைக்கலைன்னு யாரும் வருத் தப்படக்கூடாது. எனது உடல்நலன் கருதி என்னால் அலைய முடியவில்லை. பத்திரிகை வைக்க நான் மறந்துட்டேன்னு நினைச்சிடாதீங்க. இதையே எனது அழைப்பா நினைச்சி எல்லோரும் வந்துடணும்'' என்று உரிமையாகப் பேசியிருக் கிறார். வைகோவின் அந்த பேச்சில் ம.தி.மு.க.வினர் மிகவும் நெகிழ்ந்து போனார்கள். இதனையடுத்து, வைகோ பேத்தியின் திருமண வரவேற்பும், திருமண நிகழ்வும் ம.தி.மு.க தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. திருமணத் திற்கு வந்த அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் அனைவரையும் வைகோவும், துரை.வைகோவும் வரவேற்று மகிழ்ந்தனர்.

-இளையர்