Skip to main content

சூர்யாவிற்கு ஜோடியாகும் 'கர்ணன்' பட நாயகி?

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

Rajisha Vijayan

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தமிழில் அறிமுகப்படமான கர்ணன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'சர்தார்' படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

 

இந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ரஜிஷா விஜயனுக்கு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்தி படத்தில் இணைந்த ‘கர்ணன்’ பட நடிகை!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

karthi

 

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'சர்தார்'. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேற்று  (25.04.2021) வெளியிடப்பட்டது.

 

படத்தின் படப்பிடிப்பை நெல்லையில் இன்று தொடங்கியுள்ள படக்குழு, சென்னை மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ‘கர்ணன்’ புகழ் ரஜிஷா விஜயன் என இரு நடிகைகள் நடிக்க உள்ளனர். மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல இந்தி நடிகரான சுயாஸ் பாண்டே இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

 

 

Next Story

திடீர் அறிவிப்பை வெளியிட்ட கர்ணன் பட நடிகை! 

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

cvfeagfaef

 

'அனுராக கரிக்கின் வெள்ளம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரஜிஷா விஜயன், தமிழில் தனுஷ் - மாரி செலவராஜ் கூட்டணியில் உருவான 'கர்ணன்' படம் மூல அறிமுகமாகியுள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதற்கிடையே மலையாளத்தில் இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கோ கோ’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால், நன்றாக ஓடிக்கொண்டிருந்த ‘கோ கோ’ படம் திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை ரஜிஷா விஜயன் சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்...

 

"தற்போதைய கரோனாவின் இரண்டாவது அலை நெருக்கடி காரணமாக கேரள திரையரங்குகளில் இருந்து 'கோ கோ' திரைப்படத்தை திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். எங்கள் படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்ப்பதை நாங்கள் விரும்பியிருந்தாலும், எங்கள் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தான் நாங்கள் முன்னுரிமையாக வைத்திருக்க விரும்புகிறோம். தயவுசெய்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பாதுகாப்பாக இருங்கள். 'கோ கோ' திரைப்படம் விரைவில் மற்றொரு தளத்தின் மூலம் உங்களைச் சென்றடையும். இதுவும் கடந்து போகும்" எனப் பதிவிட்டுள்ளார்.