'அனுராக கரிக்கின் வெள்ளம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரஜிஷா விஜயன், தமிழில் தனுஷ் - மாரி செலவராஜ் கூட்டணியில் உருவான 'கர்ணன்' படம் மூல அறிமுகமாகியுள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதற்கிடையே மலையாளத்தில் இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கோ கோ’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால், நன்றாக ஓடிக்கொண்டிருந்த ‘கோ கோ’ படம் திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை ரஜிஷா விஜயன் சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்...
"தற்போதைய கரோனாவின் இரண்டாவது அலை நெருக்கடி காரணமாக கேரள திரையரங்குகளில் இருந்து 'கோ கோ' திரைப்படத்தை திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். எங்கள் படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்ப்பதை நாங்கள் விரும்பியிருந்தாலும், எங்கள் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தான் நாங்கள் முன்னுரிமையாக வைத்திருக்க விரும்புகிறோம். தயவுசெய்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பாதுகாப்பாக இருங்கள். 'கோ கோ' திரைப்படம் விரைவில் மற்றொரு தளத்தின் மூலம் உங்களைச் சென்றடையும். இதுவும் கடந்து போகும்" எனப் பதிவிட்டுள்ளார்.