Skip to main content

"46 ஆண்டுகளுக்கு பிறகு..." - ரஜினிகாந்த் பகிர்வு

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

rajinikanth thalaivar 170 shooting spot video viral on social media

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

 

இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் சமீபத்தில் தொடங்கியது. அங்கு அவரை பார்க்க ரசிகர்கள் படப்பிடிப்பு பகுதிகளில் கூடிவிட்டனர். பின்பு ரஜினியை காரில் கண்டதும் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். 

 

பின்பு கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து தற்போது திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினி ரசிகர்களை சந்திக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் படத்தின் கெட்டப்புடன் அருகில் இருந்தவரிடம் ரஜினி  பேசும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்துள்ளதாகவும் முன்பு 1977ல் வந்ததாகவும் கூறுகிறார். 

 


 

சார்ந்த செய்திகள்

 
News Hub