Skip to main content

"ஜோதிகாவையும் கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது; ஏனென்றால்...." - ராகவா லாரன்ஸ் விளக்கம்!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

ragava lawrence speech at chandramukhi 2 press meet

 

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பி.வாசு, லாரன்ஸ், கங்கனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது ராகவா லாரன்ஸ் பேசுகையில், "சந்திரமுகி 2வில் நடித்தது எனக்கு மிகப் பெரிய பெருமை. ஏனென்றால் ரஜினி சார் நடித்த படத்தில், நான் நடித்திருப்பது. சந்திரமுகி படத்தை அவரது ரசிகனாக தியேட்டருக்குப் போய் என்ஜாய் பண்ணினேன். இப்போது அதன் பார்ட் 2வில் நடிக்க, வாய்ப்பு கொடுத்த வாசு சார் மற்றும் லைகா நிறுவனத்துக்கும் நன்றி. அதே போல் என்னுடைய தலைவர், குரு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

கங்கனா இப்படத்தில் நடித்தது மிகப் பெரிய ப்ளஸ். தேசிய விருதுகளை வாங்கியவர். அவருடன் பணியாற்றியது ரொம்ப மகிழ்ச்சி. ஜோதிகா மாதிரி கங்கனா நடித்துள்ளார்களா என என்னிடம் நிறைய பேர் கேக்குறாங்க. ஜோதிகாவையும் கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. ஜோதிகா தன்னை சந்திரமுகியாக நினைச்சு, சந்திரமுகி எப்படியிருப்பங்களோ அப்படி நடிச்சு காமிச்சாங்க. ஆனால் இந்த படத்தின் ஒரிஜினல் சந்திரமுகியாக கங்கனா வராங்க. அவங்க இந்த கதாபாத்திரத்துக்கு எவ்ளோ உழைப்பை கொடுக்க முடியுமோ அதை கொடுத்திருக்காங்க" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்