![sgsgdsyeryw](http://image.nakkheeran.in/cdn/farfuture/xKabZIhqKD8B6KxkZ2yJXp8vWI2CE0GzPhMfRxZX4NI/1599899085/sites/default/files/inline-images/Did-Pawan-Kalyan-Close-His-Eyes-and-Ears.jpg)
பாலிவுட்டில் ஹிட்டாகி பின்னர் தமிழில் நேர்கொண்ட பார்வை என்று ரீமேக் செய்யப்பட்ட படம் பிங்க். அமிதாப் பச்சனை தொடர்ந்து தமிழில் அஜித் நடித்திருந்தார். தமிழிலும் இது ஹிட் அடித்ததை தொடர்ந்து, பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். கடந்த வருடமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் சமீபத்தில் பவனின் பிறந்தநாளை முன்னிட்டு மோஷன் போஸ்டரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கிடையே பவனின் பிறந்தநாள் அன்று இரவு பவனுக்கு கட்டவுட் வைக்கும்போது சரிந்து விழுந்ததில் மூன்று பேர் இறந்துள்ளனர். இதற்கு படத்தின் இணை தயாரிப்பாளரான போனி கபூர், மறைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் நிதியுதவி அளித்தார். இந்நிலையில் அஜித்தின் ஆரம்பம், வேதாளம், என்னை அறிந்தால் படங்களின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், நடிகர் ராம் சரண், நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதியுதவி அளித்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி அளித்த நடிகர் அல்லு அர்ஜுனுக்கு என் எனது மனமார்ந்த நன்றி.
மற்றுமொரு பதிவில்..."விபத்தில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் அனுப்ப வேண்டும் என்ற உங்கள் (ஏஎம் ரத்னம்) தாராள மனதை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.
மற்றுமொரு பதிவில்..."விபத்தில் இறந்த 3 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் அனுப்ப வேண்டும் என்ற உங்களது (அல்லு அர்ஜுன்) அன்பான மனதுக்கு நன்றி" என கூறியுள்ளார்.