Skip to main content

தூய்மை பணியாளர்களின் மீதான ஒடுக்குமுறை, மெட்ரோ நகரங்களின் மறுபக்கம் ; லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

Oppression of cleaning staff, the other side of metro cities; First look poster released by Lokesh Kanagaraj

 

'இவன் தந்திரன்' படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் 'விக்ரம் வேதா' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 'கே-13', 'நேர்கொண்ட பார்வை', 'மாறா' படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் விஷாலின் 'சக்ரா' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே முதல் முறையாக தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் அனுபவ நடிகை ரோகினியுடன் இணைந்து 'விட்னஸ்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'தி பீப்பிள் மீடியா ஃபேக்டரி' வழங்கும் இப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். தீபக் இப்படத்தை இயக்கியதோடு ஒளிப்பதிவும் செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில்  'விட்னஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து " தூய்மை பணியாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படம் இதுவரை பார்த்திராத மெட்ரோ நகரங்களின் மறுபக்கத்தையும் அவர்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறையையும் இந்த படம் பேசும் " என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்