Skip to main content

"அந்த அரக்கனுக்கு எதிராக முறையான நடவடிக்கை" - பி.எஸ்.பி.பி ஆசிரியர் குறித்து நிவேதா பெத்துராஜ்

Published on 24/05/2021 | Edited on 24/05/2021
fgegewgs

 

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருவதால், முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதுதொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டுகளும் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆசிரியரின் இந்த செயல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஆசிரியரின் இந்த செயலுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவு செய்துள்ளார். அதில்...

 

"பி.எஸ்.பி.பி பள்ளி சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளியை வெளி உலகுக்குச் சுட்டிக்காட்டிய சிறுமிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அந்த அரக்கனுக்கு எதிராக முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனிதாபிமானம் இருக்கும் என நினைத்தேன்” - நிவேதா பெத்துராஜ் விளக்கம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
nivetha pethuraj explain about his issue

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை. இதையடுத்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் சென்னையில் நடக்கவிருந்த கார் ரேஸுடன் நிவேதா பெத்துராஜை தொடர்புபடுத்தி தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபகாலமாக எனக்கு பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிப் பேசுபவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனமில்லாமல் கெடுக்கும் முன், தாங்கள் சேகரிக்கும் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்கும் என்று நினைத்ததால், நான் அமைதியாக இருந்தேன்.

நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள். நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நான் 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கிறேன். எனது குடும்பம் இன்னும் துபாயில் வசிக்கிறது. நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் இருக்கிறோம். திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரையோ, ஹீரோவிடம் நடிக்கவோ, பட வாய்ப்புகளை தரும்படியோ கேட்டதில்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். நான் எப்போதும் வேலை அல்லது பணத்திற்காக பேராசை கொள்ளமாட்டேன்.

என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002 ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். மேலும், 2013 ஆம் ஆண்டு முதல் ரேசிங்கே எனது விருப்பமாக இருந்து வருகிறது. உண்மையில் சென்னையில் நடத்தப்படும் ரேசிங் பற்றி எனக்கு தெரியாது. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, நான் இறுதியாக மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். நான் தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே.

நான் இதை சட்டரீதியாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது. அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்யமாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து எங்கள் குடும்பத்தை இனி எந்தக் காயங்களுக்கும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

சாம்பியன் பட்டம் வென்ற நிவேதா பெத்துராஜ்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
nivetha pethuraj champions in badmiton

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை. இதையடுத்து ஏ.எல் விஜய் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார். 

இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் அவர், ஸ்போர்ட்சிலும் அவ்வப்போது ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட், பேட்மிண்டன் போட்டி நடத்தியது. அதில் மதுரை அணிக்காக இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.