கரோனா வைரஸ் தொற்று உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸானது தற்போது உலகம் முழுக்க 190 நாடுகளில் பரவியுள்ளது.
![vidya balan](http://image.nakkheeran.in/cdn/farfuture/T-Wr3QleOx0kytiBb4lat4ON7I-GrogAkauHCH3gtQo/1585127477/sites/default/files/inline-images/vidya%20balan_0.jpg)
அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகள் கூட இந்த நோயின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நோயை தடுக்க தற்போது எந்த தடுப்பு மருந்தும் இல்லை என்பதால் நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இந்தியாவில் மட்டுமில்லை, உலக நாடுகள் பல இந்த உத்தரவைதான் தற்போது கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா முழுவதும் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகை வித்யா பாலன், கரோனா வைரஸ் மனித குலத்திற்கு பல பாடங்களை புகுட்டியுள்ளது என்று கரோனாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ''கரோனா வைரஸுக்கு நன்றி. எங்களை உலுக்கி நாங்கள் நினைத்திருந்ததை விட மிகப்பெரிய ஒன்றை நாங்கள் சார்ந்திருக்கிறோம் என்று எங்களுக்குக் காட்டிய கரோனா வைரஸுக்கு நன்றி.
அபரிமிதமான தயாரிப்புகள், சுதந்திரம், உடல் நலம் போன்ற வசதிகளைப் பாராட்ட வைத்த கரோனா வைரஸுக்கு நன்றி. அடிப்படை விஷயங்களுக்குக் கூட நேரமில்லாமல் எங்களது வேலைகளில் நாங்கள் எவ்வளவு தொலைந்து போயிருக்கிறோம் என்று எங்களுக்குக் காட்டிய கரோனா வைரஸுக்கு நன்றி.
எதை எதையோ முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு எது உண்மையில் முக்கியம் என்று காட்டிய கரோனா வைரஸுக்கு நன்றி.
போக்குவரத்தை நிறுத்தியமைக்கு நன்றி. இந்த பூமி நீண்ட காலமாக எங்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. நாங்கள் கேட்கவில்லை. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது''.இதனை தொடர்ந்து இந்த வீடியோவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.