Skip to main content

ராஜேஷ் இயக்கிய 'மை3' சீரிஸ் - ரிலீஸ் தேதி வெளியீடு

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

my 3 web series release date update

 

ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி, அஷ்னா ஜவேரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'மை3'.  ராஜேஷ் எம் இயக்கியுள்ள இந்த சீரிஸ் ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்வதாக உருவாகியுள்ளது. இசைப் பணிகளை கணேசன் கவனிக்கிறார். ஹாட்ஸ்டாரில் இந்த சீரியஸ் வெளியாகிறது. 

 

கடந்த மாதம் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நேற்று ட்ரைலர் வெளியானது. ட்ரைலரில், முகேன் ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாகப் பாதிப்புக்குள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட மை3 என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்குப் பதிலாக சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை போல் தெரிகிறது. 

 

இந்நிலையில் இந்த சீரிஸின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் முறையாக இணைந்த அதர்வா - அதிதி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
atharvaa aditi shankar movie update

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இப்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ' படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், அதர்வா நடிக்கும் புதுப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம். ராஜேஷ் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி. ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற்போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார்.

Next Story

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

Priyanka Mohan to pair up with Jayam Ravi - Official announcement released

 

நடிகர் ஜெயம் ரவி தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'ஜன கன மன', 'அகிலன்' என்ற படத்தில் நடிக்கிறார். பின்பு மீண்டும் 'ஜன கன மன' படத்தை இயக்கிய அஹ்மத் இயக்கும் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. ஜெயம் ரவியின் 30-வது படமான இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் நட்டி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். பூஜை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளது.