![hhs](http://image.nakkheeran.in/cdn/farfuture/8H56bbwe3K38KpM-FG1TZHqMDkHNNcSUDPkd8VHpgeA/1599200041/sites/default/files/inline-images/Mahat-Raghavendra-go-profile-1-1024x576-1.jpg)
தெலுங்கின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கிய பிறகு படத்தில் நடிப்பதில்லை என்று விலகியிருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியான 'பிங்க்' படத்தை தமிழில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. 'வக்கீல் சாப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தற்போது பவன் கல்யாண் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், இவர் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பவனுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மஹத் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து நடிகர் மஹத்துக்கு நன்றி தெரிவித்து பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார். அதில்...
"அன்புள்ள திரு. மஹத் ராகவேந்திரா, உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் நல்வாழ்வு மற்றும் வெற்றிக்கு எனது முழு மனதுடன் வாழ்த்துகள்" என பதிவிட்டார். இந்த பதிவை கண்ட நடிகர் மஹத், "ஓ மை கடவுளே, குழந்தை பருவத்திலிருந்தே ஒரு ஹீரோவைப் போற்றி பல வருடங்கள் கழித்து ஒரு கனவு நனவாகும் தருணம் இது. தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரைப் பற்றி பேசுவேன்! இறுதியாக, கடவுளே பதிலளித்துவிட்டார். ஐ லவ் யூ சார்!" என பதில் ட்வீட் செய்துள்ளார்.