இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அமீர் கான், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என ஏகப்பட்ட பேர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கைதி 2, விக்ரம் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் உறியடி விஜய்குமார் நடித்த ஃபைட் கிளப் படத்தை வழங்கியிருந்தார். பின்பு பென்ஸ் என்ற தலைப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தை இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார். அதோடு இதில் கதையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இவர் வழங்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
யூட்பில் பிரபலமடைந்த பாரத் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் யூட்யூபில் இயக்கிய நிரஞ்சன் இதில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் கதாநாயகியாக ‘கட்சி சேர’ ஆல்பம் புகழ் சம்யுக்தா நடிக்கிறார். இப்படத்திற்கு பிரனவ் முனிராஜ் இசையமைக்கிறார். ‘மிஸ்டர் பாரத்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் ஜாலியான கலகலப்பான ஜானரில் உருவாகுவதாக தெரிகிறது.
ஏ.வி.எம். தயாரிப்பில் ரஜினி நடிப்பில் 1986ஆம் ஆண்டு ‘மிஸ்டர் பாரத்’ என்ற தலைப்பில் படம் வெளியாகியிருந்தது. அந்த படத்தின் தலைப்பை இப்படக்குழு பயன்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் உரிமை தந்த ரஜினிகாந்த் மற்றும் ஏ.வி.எம். நிறுவனதுக்கு நன்றி என தனது எக்ஸ் பக்கம் வாயிலாக அவர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
My sincere thanks to Superstar @rajinikanth sir and @avmproductions for granting us the rights for the title #MrBhaarath ❤️❤️❤️
Forever grateful for this and will always cherish it 🤗🤗 https://t.co/gEhQ96UMke— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 18, 2024