விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகி வரும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியபோது.... "நேற்று விஷால் இந்த படத்தை பார்த்து இதில் நடித்தவர்கள் எல்லாரும் அப்படியே உள்ளனர் பதிமூன்று வருடம் ஆனது போல் தெரியவில்லை என்றார். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. விஷால் போன படத்தின் பேஜ் ஒர்க்குக்காக கூப்பிட்டாலும் வந்துவிடுவார். எவ்வளவு வேலை, இரண்டு சங்கத்திலும் தலைமை பொருப்பு, அதையும் தாண்டி இப்படி மெய்ண்டன் பண்ணுவது மிக பெரிய விஷியம். அது அவர்கள் அப்பாவிடம் இருந்து வந்தது. அவரும் எப்போதும் சரியாக இருப்பார். நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே ஜி.கே பேக்டரி தெரியும். விஷாலை தம்பி, முதலாளி, நண்பன் என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன்.
சண்டக்கோழி முதல் பாகம் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் அப்படியே உணர்ந்தேன். முதல் பாகத்தை காட்டிலும் இதில் அதிகமாக மெனக்கிடல் செய்துள்ளேன். மேலும் இந்த பாகத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளார். நான் சூர்யா, மாதவன், அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன். அதன் பின் விஷாலுடன் வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன். எனக்கும், விஷாலுக்கும் இது அருமையான படமாக அமையும். ஏனென்றால் எங்களுக்கு அப்படியொரு குழு அமைந்து அவ்வளவு உழைப்பை போட்டுள்ளது. நான் கேட்டதை அனைத்தும் செய்து கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு வார்த்தையில் கவிதை சொல்ல வேண்டும் என்றால் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது. மீரா ஜாஸ்மீன் இடம், ஹீரோ இடம், வில்லன் இடம் என அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன். எனக்கு சவாலாக அமைந்தது மீராஜாஸ்மீன் கதாபாத்திரம் தான். அது முக்கியமாக சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன். கீர்த்தி தான் அதற்கு சரியாக இருப்பார் என தோன்றியது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையமைத்த இரும்புத்திரையும், அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது. மதன் கார்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார். பாடல் அருமையாக வந்துள்ளது. நா.முத்துக்குமார் அவர்கள் இப்போது இல்லை. அவருக்கு நிகராக அருண்பாரதி, ஏகாதசி உள்ளனர். பிருந்தாசாரதி 'சூரியரும் சூரியனும்' என்ற பாடலை எழுதியுள்ளார். எடிட்டர் பிரவீன் கே.எல் சாருடன் முதல் முறையாக பணியாற்றுகிறேன். அவர் தான் படம் விரைவில் வெளிவர முக்கிய காரணமானவர். தென்னவன் சார், சண்முகம் சார் இன்னும் நாலு பாகம் எடுத்தாலும் உடன் இருப்பார்கள். ஒளிப்பதிவாளர் சக்தி 'ரன்' படத்தில் ஜீவா சாரின் கடைசி அசிஸ்டன்ட். இந்த படத்தின் வளர்ச்சி அவரை சேரும். 800 பேர் கூட்டத்திலேயே படம் முழுவதும் எடுக்கும் விதமாக இருந்தது. பையா எப்படி காருக்குள்ளையே ஒரு படமோ, அதே போல் இது ஒரு திருவிழாக்குள்ளேயே ஒரு படம். ராஜ் கிரன் சார் அருமையாக நடித்துள்ளார். முதல் பாக தயாரிப்பாளர் விக்கிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன். நன்றி" என்றார்.