![laabam](http://image.nakkheeran.in/cdn/farfuture/husqwERjeMIkEqQ0IEGgkbGEwP0HKGhpeRRd4L620Zk/1616244887/sites/default/files/inline-images/Ew6a-d1VIAMdQcX.jpg)
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லாபம்'. இப்படத்தை, விஜய் சேதுபதியுடன் இணைந்து 'சவன் சி என்டர்டெயின்ட்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதையடுத்து, இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், லாபம் படத்தின் நிலை குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபம் படத்திற்கான அனைத்துப் பணிகளையும் எஸ்.பி.ஜனநாதன் முடித்துக் கொடுத்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள ஒரு சில பணிகளை படக்குழுவினர் நிறைவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், 'படம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.