வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெற்றி பெற்றுள்ள படம் “கோமாளி”. ஜெயம் ரவி - காஜல் அகர்வால் கூட்டணியில் உருவான இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
![ks](http://image.nakkheeran.in/cdn/farfuture/VmqwEpFJWY9odpqH25opZNu-t-31Z-9DVPMZ4yiivL4/1570515429/sites/default/files/inline-images/IMG_4596.jpg)
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் பேசியபோது... "இந்தப்படத்தை வெற்றி படமாக்கியதில் முக்கிய பங்கு பத்திரிக்கையாளர்களுக்கு உண்டு. நான் சமீபமாக வெளி மாநில படங்கள் இயக்கிக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் விளம்பர படம் ஒன்றும் செய்தேன். அதைத் தொடர்ந்து நடிப்பு வாய்ப்புகள் நிறைய வந்தது. எல்லாமே புதுமுக இயக்குநர்கள் தான். அவர்கள் புதிது புதிதான ஐடியாக்காளோடு வருகிறார்கள். அவர்களுடன் வேலை செய்வது நன்றாக இருக்கிறது. ஜெயம் ரவி இன்னும் புதிய இளைஞன் போல் உழைத்துக்கொண்டே இருக்கிறார். ஈகோ இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் இன்னும் உயரங்கள் அடைய வேண்டும். இந்த வெற்றிப்படத்தில் என்னை பங்குபெறச் செய்ததற்கு நன்றி" என்றார்.