![karthi sardar movie Yaerumayileri lyric video released](http://image.nakkheeran.in/cdn/farfuture/qlhJPZi2_7_uVU93F1QMaZ6cQvuCgMMkeSwEUscjf0A/1665406465/sites/default/files/inline-images/387_3.jpg)
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்தார்'. 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'சர்தார்' படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில், நாடக மேடையில் கார்த்தி வித்தியாசமான பல கெட்டப்புகளில் பாட்டு பாடி நடனம் ஆடி வருகிறார். மேலும் கார்த்தி பாடிய இப்பாடலில் 'கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு' என வரும் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.