Skip to main content

மூன்றாவது முறையாக கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

 kamal manirathnam movie trisha is playing female lead character reported

 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும் கமிட்டாகியுள்ளார். 

 

35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனமும் தயாரிக்கின்றனர். இசை பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார். 

 

கமல்ஹாசனின் 234வது படமாக உருவாகும் இப்படத்தில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் கமலுடன் மூன்றாவது முறையாக த்ரிஷா நடிக்கவுள்ளார். முன்னதாக 'மன்மதன் அம்பு', 'தூங்காவனம்' உள்ளிட்ட கமல் படங்களில் திரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

த்ரிஷா நடிப்பில் 'ராங்கி' படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 'தளபதி 67' படத்திலும், அஜித், விக்னேஷ்சிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் எனப் பரவலாகப் பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொடர்ந்து படம் பண்ணுங்க” - கோரிக்கைக்கு ஓகே சொன்ன விஜய்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாற்றியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு மாலை அணிவித்த சக்திவேலன், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருஷத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரத்தை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டரில் கூஸ்பம்ஸ் தருணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படம் பண்ணுங்க” என்றார். இதனிடையே அவருக்கு பதிலளித்த விஜய், சரி என சொல்லிவிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைப் படத்தை தவிர்த்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

உத்தம வில்லன் நஷ்டம்...திருப்பதி பிரதர்ஸ் கண்டன அறிக்கை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Thirrupathi brothers about uttama villain issue

கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர், போஜ குமார், ஆன்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்  இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களைப் பரப்புவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான், கமலஹாசனை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான  உத்தம வில்லன், எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது கமலஹாசனுக்கும் நன்றாகவே தெரியும். 

உத்தம வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசனும் அவரது சகோதரர் அமரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான யூட்யூப் சேனல் ஒன்று உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.