
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகத்தியா’.வேல்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, டத்தோ ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 28 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஜீவாவை சந்தித்தோம். அப்போது அவரிடம் அவரது ஆரம்ப கால திரைப்படங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜீவா, “அந்த நேரத்தில் என் படங்கள் மீது விமர்சனங்கள் இல்லை. காரணம் அந்தளவிற்கு என் படங்கள் ரீச் ஆகாது. ஆனாலும் மக்களால் ரசிக்கப்பட்டது. அது மாதிரியான படங்களால் ஊக்குவிப்பு அதிகமாக இருந்தது. அதனால் நிறைய சேலஞ் உள்ள படங்கள் பண்ண வேண்டும் என நினைத்தேன்.
என்னுடைய ஆரம்பக்கட்ட படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சரியாக போகவில்லை. பொதுவாக எந்த ஒரு பிஸ்னசிலும் வெற்றி தோல்வி இருக்கும். ஒரு நல்ல நடிகருக்கும் அப்படித்தான். அது நம் பயணத்தின் ஒரு பகுதிதான். அதனால் வருத்தப்பட ஒன்றுமில்லை.வெற்றியை ரொம்ப தலைக்கு கொண்டு போகக்கூடாது. தோல்வியை ரொம்ப மனதுக்கு எடுத்து போகக்கூடாது. தோல்விகள் இல்லாமல் நாம் மோட்டிவேட் ஆக மாட்டோம். அதே சமயம் தோல்வி தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளத் தூண்டும்” என்றார்.