மலையாளப் படங்களில் தொடர்ந்து மருத்துவர்கள் குறித்தும் சிகிச்சை முறைகள் குறித்தும் தவறாக சித்தரிப்பதாகவும் அதை தடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவர் சங்கம், மத்திய தணிக்கை வாரியத்திற்கு வலியுறுத்தியுள்ளது.
மலையான சினிமாவில் மருத்துவர்கள் குறித்து தவறாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்திருப்பதாக பல மருத்துவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரான்ஸ் படம் வரை தொடர்ந்திருப்பதால் இந்திய மருத்துவர் சங்கம், மத்திய தணிக்கை வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், “சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ட்ரான்ஸ்’ படத்தில் மனநல மருத்துவர்கள் குறித்தும், அதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் குறித்தும் தவறாக சித்திரித்துள்ளார்கள். அதேபோல, ‘ஜோசப்’ படத்தில் உறுப்பு தானம் குறித்து சொல்லப்பட்ட கருத்துகளால் உறுப்பு தானம் செய்ய முன்வரும் மக்களுக்கு அதுகுறித்து தவறான எண்ணம் ஏற்பட வழிவகுக்கிறது” என்று இரண்டு படங்களை குறிப்பிட்டு குற்றச்சம் சாட்டப்பட்டுள்ளது.