![imman](http://image.nakkheeran.in/cdn/farfuture/tpsBV6NP5Z_u0WqH2gYiOM9oy15F8VrlNSbFSrd6-Gc/1616569788/sites/default/files/inline-images/82_11.jpg)
திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2019ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று முன்தினம் (22.03.2021) அறிவிக்கப்பட்டன. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘விஸ்வாசம்’ படத்திற்காக இமானுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, இமானுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/r-t7hi0knHbsv6oM9G_83d70DsCxbR_ZBDAyh7LZppg/1616570018/sites/default/files/inline-images/Kadan-article-inside-ad_0.png)
இந்த நிலையில், ரஜினி, அஜித், விஜய் மூவருமே தன்னை வாழ்த்தியதாகக் கூறி நெகிழ்ச்சியான ஒரு ட்விட்டர் பதிவினை இமான் வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "தேசிய விருது வென்றதற்காக நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ஃபோன் செய்து வாழ்த்தியது உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும், விஜய் அண்ணன், அஜித் சாரின் தனிப்பட்ட வாழ்த்துகளைப் பணிவுடன் ஏற்கிறேன். என்னுடைய இசை பயணம் விஜய் அண்ணனின் ‘தமிழன்’ படத்தின் மூலம் தொடங்கியது. ‘விஸ்வாசம்’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்திற்காக அவர் வாழ்த்தியது கூடுதல் சிறப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Glad to witness and come across amazing humans more than stars! pic.twitter.com/ZNagCkCQEO
— D.IMMAN (@immancomposer) March 23, 2021